அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

 

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேனி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேருராட்சிக்கு உட்பட்ட கக்கன்ஜு காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இந்த நிலையில் இன்று மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேவதானப்பட்டிக்கு வருகை தந்தார். இதனை அறிந்த கக்கன்ஜி காலனியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரை சூழ்ந்துகொண்டு, தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துக்தர கோரி மனுக்களை வழங்கினர். இதனையடுத்து மனுக்களை பெற்றுகொண்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்துசென்றனர்.