சென்னையில் யாரும் வாக்கிங் செல்ல அனுமதி கிடையாது – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

 

சென்னையில் யாரும் வாக்கிங் செல்ல அனுமதி கிடையாது – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி மற்றும் மதுரையில் ஊரடங்கு கடுமைபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் யாரும் வாக்கிங் செல்ல அனுமதி கிடையாது – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ், தூய்மை பணியாளர்கள் மீது தனி கவனம் செலுத்தப்படுவதாகவும் வாரந்தோறும் புதிதாக கையுறைகளும் நாள்தோறும் புதிதாக மாஸ்க் வழங்கப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து, போலி இ-பாஸ் மூலம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கைகளில் எழுதி தரும் இ-பாஸ் செல்லாது என்றும் QR Code உடன் இருக்கும் இ-பாஸ் மட்டுமே செல்லும் என்றும் முறையாக பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும், சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.