‘திமுகவின் அந்த வாக்குறுதி’.. வேட்பாளர்களை வழிமறித்து எதிர்க்கும் மக்கள்!

 

‘திமுகவின் அந்த வாக்குறுதி’.. வேட்பாளர்களை வழிமறித்து எதிர்க்கும் மக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கதா நாயகன் தேர்தல் அறிக்கை தான். அதை வைத்து தான் மக்கள் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதை முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக திமுக வகுத்த வியூகங்களுள் ஒன்று தேர்தல் அறிக்கை.

‘திமுகவின் அந்த வாக்குறுதி’.. வேட்பாளர்களை வழிமறித்து எதிர்க்கும் மக்கள்!

விலைவாசி குறைப்பு, தமிழுக்கு முன்னுரிமை, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படுகிறது. பிற அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கை அமைந்தது. இந்த நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் ஒரு வாக்குறுதி மட்டும் எதிர்ப்புகளை கிளப்பியிருக்கிறது.

‘திமுகவின் அந்த வாக்குறுதி’.. வேட்பாளர்களை வழிமறித்து எதிர்க்கும் மக்கள்!

ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் பழங்குடியினர் பிற இனத்தவரை திருமணம் செய்து கொண்டால் ரூ.60 ஆயிரம் நிதியுதவியும் ஒரு சவரன் தங்கக் காசும் வழங்கப்படும் என்பதே அந்த வாக்குறுதி. சாதியை தூண்டும் வகையில் இந்த வாக்குறுதி அமைத்திருப்பதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக இந்த வாக்குறுதி இருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் பொதுமக்கள், திமுகவினர் பிரச்சாரங்களுக்கு செல்லும் இடங்களிலெல்லாம் வழிமறித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். இது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.