6 மாதங்களாக வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் பொய்: நிதித்துறை

 

6 மாதங்களாக வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் பொய்: நிதித்துறை

6 மாதங்களாக வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற செய்தி முற்றிலும் தவறானது என நிதித்துறை விளக்கமளித்துள்ளது.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் ஓய்வூதியமானது ஆறு மாதங்களாக எடுக்காமல் இருந்தால் அதை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் இருந்து கடந்த 6 மாதமாக பணப் பரிவர்த்தனை நடைபெறாது இருப்பின் குறிப்பிட்ட அந்த ஓய்வூதியதாரரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கப்படும் என கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

6 மாதங்களாக வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் பொய்: நிதித்துறை

இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் ஆறுமாதம் பென்ஷன் தொகையை வங்கியில் இருந்து எடுக்காவிட்டால், வங்கியிலிருந்து பணம் திரும்பி எடுக்கப்படும் எனவும் பென்சன் நிறுத்தப்படும் எனவும் வெளியான தகவல் உண்மையில்லை என நிதித்துறை விளக்கமளித்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஓய்வூதியதாரர், உயிருடன் உள்ளாரா? என்பதற்கான சான்றிதழ் கேட்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றும், இதற்காக உயிர் சான்றிதழ் சமர்பிப்பதற்காக ஓய்வூதியதாரர்கள் யாரும், கருவூலங்கள் தேடி வர வேண்டாம் என்றும் நிதித்துறை தெரிவித்துள்ளது. யாருடைய பென்சனும் நிறுத்தப்பட மாட்டாது, 6 மாதம் வங்கி பரிவர்தனைகள் இல்லாத கணக்குகள் முடக்கப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் நிதித்துறை அறிவித்துள்ளது.6 மாத கால பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் குறித்து கணக்கெடுக்க மட்டுமே நிதித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிவர்த்தனை செய்யப்படாத ஓய்வூதிய தாரர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.