திமுக சிட்டிங் எம்எல்ஏவை தட்டி தூக்கும் பாமக #Pennagaram

 

திமுக சிட்டிங் எம்எல்ஏவை தட்டி தூக்கும் பாமக #Pennagaram

பென்னாகரம் தொகுதியில் 1996ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த புருஷோத்தமன் 49 ஆயிரத்து 585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் 1996 ஆம் ஆண்டு பாமகவை சேர்ந்த ஜி.கே மணி 34 ஆயிரத்து 906 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும் 2001ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக தலைவர் ஜி.கே. மணி பென்னாகரம் தொகுதியை கைப்பற்றினார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 125. 2006 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த பெரியண்ணன் 74 ஆயிரத்து 109 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நஞ்சப்பன் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வாங்கி வெற்றி வாகை சூடினார் . 2016ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த இன்பசேகரன் பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் தோல்வியைத் தழுவியவர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இங்கு திமுக மூன்று முறையும் ,பாமக இரண்டு முறையும், அதிமுக இந்திய பொதுவுடமைக் கட்சி ஒருமுறையும் பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.2010 இடைத்தேர்தலில் திமுகவிலிருந்து இன்பசேகரன் வெற்றி பெற்றார்.

திமுக சிட்டிங் எம்எல்ஏவை தட்டி தூக்கும் பாமக #Pennagaram

2021 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் திமுகவை சேர்ந்த இன்பசேகரன், அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் ஜி.கே.மணி, பென்னாகரம் தொகுதி அமமுக வேட்பாளா் வி.பி.சாம்ராஜ், நாம் தமிழர் கட்சி தமிழழகன், மக்கள் நீதி மய்யம் ஷகிலா, அமமுக கூட்டணியில் தேமுதிக உதயகுமார் மற்றும் சுயேச்சைகள் களம் இறங்கியுள்ளனர்.

திமுக சிட்டிங் எம்எல்ஏவை தட்டி தூக்கும் பாமக #Pennagaram

பென்னாகரம் தொகுதி மக்களின் கோரிக்கையாக கூறுவது ஒகேனக்கல் உபரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல் குடிநீர் பிரச்சினையும் இந்த தொகுதியின் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. சாலைகள் சிறந்த மேம்பாட்டுடன் போட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திமுக சிட்டிங் எம்எல்ஏவை தட்டி தூக்கும் பாமக #Pennagaram

பென்னாகரம் தொகுதியில் மக்கள் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு வலுவான ஆதரவை கொடுத்துள்ளனர் இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கியை இங்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திமுகவுக்கும் பென்னாகரம் தொகுதியில் பரவலாக நல்ல ஆதரவு உள்ளது. இங்குள்ள இஸ்லாமியர்கள் ,சிறுபான்மையினர் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.இருப்பினும் பென்னாகரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது அதிமுக கூட்டணிக்கு வலுவாக இருப்பது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.பென்னாகரம் தொகுதி மக்களின் கருத்துக்களை இந்த வீடியோவில் கண்டு களிக்கலாம்.