திருஷ் பூசணிக்காயை சாலையில் வீசினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை

திருஷ் பூசணிக்காயை சாலையில் வீசினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை

ஈரோடு

ஈரோட்டில் ஆயுதபூஜையின் போது பூசணிக்காய்களை சாலையில் வீசுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஆணையர் இளங்கோவன், ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையின்போது, தொழில்

திருஷ் பூசணிக்காயை சாலையில் வீசினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை

நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பூஜைசெய்து, திருஷ்டியை போக்குவதற்காக உடைக்கப்படும் பூசணிக்காய் மற்றும் வாழைத்தார்களை சாலையில் வீசி செல்லக் கூடாது என கேட்டுக்கொண்டார். இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் வரும் தூய்மை பணியாளர்களிடம், பூசணிக்காய், வாழைத்தார் மற்றும்

திருஷ் பூசணிக்காயை சாலையில் வீசினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை

காய்கறி கழிவுகளை கொடுக்க வேண்டும் என்றும், அதனை மீறி சாலையில் வீசுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வாழைத்தார் மற்றும் பூசணிக்காய் விற்பனையில் ஈடுபடுவோர், வியாபாரம் முடிந்தவுடன் மீதமுள்ளவற்றை கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.