Home இந்தியா பெகாசஸ் லீலைகளால் களேபரமான ராஜ்யசபா… ஐடி அமைச்சர் வாசித்த அறிக்கையை கிழித்து எறிந்த திரிணாமுல் எம்பி!

பெகாசஸ் லீலைகளால் களேபரமான ராஜ்யசபா… ஐடி அமைச்சர் வாசித்த அறிக்கையை கிழித்து எறிந்த திரிணாமுல் எம்பி!

பெகாசஸ் என்ற மென்பொருள் இன்று இந்தியாவையே புரட்டி போட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் இயலாமை வெட்டவெளிச்சமாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களின் போன்களை ஹேக் செய்து, அவர்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை படுஜோராக அரங்கேறியிருக்கிறது.

பெகாசஸ் லீலைகளால் களேபரமான ராஜ்யசபா… ஐடி அமைச்சர் வாசித்த அறிக்கையை கிழித்து எறிந்த திரிணாமுல் எம்பி!
After Lok Sabha, Rajya Sabha secretariat resumes normal functioning on day  27 of nationwide lockdown- The New Indian Express

இந்த பெகாசஸ் எந்த போனிலும் ஊடுருவி அனைத்தையும் பக்காவாக ஆட்டையைப் போடுவதில் கில்லி. இதனை உருவாக்கியது இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம். இந்நிறுவனத்தில் பல்வேறு உலக நாடுகளின் அரசுகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதாவது இந்த ஸ்பைவேரை பெற்றுக்கொண்டு அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் வேவு பார்க்க பயன்படுத்தலாம். இதன்மூலம் இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக The Wire செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

"யார் போனையும் வேவு பார்க்கவில்லை" என்று சொன்ன அமைச்சரின் செல்போனையே ஹேக் செய்ததாக தகவல்!

மத்திய அரசின் தயவு இல்லாமல் இந்த ஹேக்கிங் அரங்கேறியிருக்காது என்பதால், ஜூலை 19ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பினர். குறிப்பாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளித்த புதிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், “சட்ட விரோதமாக ஒருவரின் போனை கண்காணிப்பது என்பது இந்தியாவில் சாத்தியமற்ற ஒன்று.

राहुल गांधी का पर्सनल नंबर! करें सीधी बात-नो बकवास, जानें और भी बहुत कुछ |  NewsTrack

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்தச் செய்தி வெளியாகியிருப்பது தற்செயலானது அல்ல. குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதில் துளியும் உண்மையும் இல்லை. யாருடைய போனும் ஹேக் செய்யப்படவில்லை” என்றார். அவர் விளக்கமளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே The Wire இதழ் ஹேக்கிங் செய்யப்பட்ட அடுத்த பட்டியலை வெளியிட்டது. அதில் விளக்கமளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வின் பெயரும் இருந்தது தான் இங்கே ஹைலைட்டான விஷயம்.

Pegasus Statement Snatched From IT Minister, Trinamool MP Tears It

இதுதொடர்பாக மூன்று நாட்களாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இன்று மாநிலங்களவையில் அமைச்சர் அஸ்வினி பெகாசஸ் தொடர்பாக அறிக்கை வாசித்தார். அப்போது எதிர்பாராவிதமாக திரிணாமுல் எம்பியான சாந்துனு சென், அமைச்சர் வாசித்த அறிக்கையைப் பிடுங்கி கிழித்து அவை துணைத் தலைவர் ஹரிவன்ஸை நோக்கி தூக்கியெறிந்தார். இதனால் பெரும் பரபரப்பு எழுந்த நிலையில், நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெகாசஸ் லீலைகளால் களேபரமான ராஜ்யசபா… ஐடி அமைச்சர் வாசித்த அறிக்கையை கிழித்து எறிந்த திரிணாமுல் எம்பி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் ரத்து...

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி – குஷ்பு ட்வீட்!

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த...

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அதிமுக முன்னாள்...
- Advertisment -
TopTamilNews