புதுமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற பி.டி.ஓ, உதவியாளர் கைது

புதுமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற பி.டி.ஓ, உதவியாளர் கைது

தஞ்சையில் புதிய வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ. மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே விளார் சாலை ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் நவீன்குமார்.

புதுமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற பி.டி.ஓ, உதவியாளர் கைது

இவர் அருகிலுள்ள பத்மநாபன் நகரில் தனது மனைவி பெயரில் புதிதாக மனை வாங்கியுள்ளார். இந்த மனைக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, தஞ்சாவூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார், மேலும் அதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட்டார். இந்நிலையில், அங்கீகார சான்றிதழை வழங்க பி.டி.ஓ பாலசுப்ரமணியம் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நவீன்குமார் அளித்த புகாரின் பேரில், லஞ்ச பணத்தை பெறும்போது பி.டி.ஓ. பாலசுப்ரமணியம் மற்றும் அலுவலக உதவியாளர் மகாதேவ ராவ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர். விசாரணைக்கு பின், இருவரும் கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தப்பட்டனர்.

புதுமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற பி.டி.ஓ, உதவியாளர் கைது