“பிசிஆர் பரிசோதனை முடிவில் நெகடிவ்” : நம்பாதீங்க மக்களே… எச்சரிக்கும் மருத்துவர்கள்!

“பிசிஆர் பரிசோதனை முடிவில் நெகடிவ்” : நம்பாதீங்க மக்களே… எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா தொற்று காலத்தில் பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஒரு வாரத்திற்கு மட்டுமே இருந்தாலும், அவர்கள் மீண்டும் பரிசோதனை செய்ய கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் சிலர் அறிவுரை கூறுவர் . காரணம் ஒரு வாரத்திற்குப் பிறகு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்போது தொற்று இருப்பதாக முடிவு வரும் என்பதால் தான். கொரோனா வைரஸை கண்டறிய நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை மிகவும் உணர்திறன் மிக்கது. இது சில நேரங்களில் இறந்த வைரஸ் கிருமிகளைக் கூட பரிசோதனையில் காட்டுமாம்.

“பிசிஆர் பரிசோதனை முடிவில் நெகடிவ்” : நம்பாதீங்க மக்களே… எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இதுவொருபுறமிருந்தாலும், கொரோனா அறிகுறிகள் இருந்து பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்தால் அவர்களுக்கு உடனடியாக சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை மேற்கொண்டு தொற்றை உறுதி செய்கின்றனர் மருத்துவர்கள். பிசிஆர் பரிசோதனையின்போது 10 விநாடிகள் வாய்/மூக்கினுள் பிளாஸ்டிக் போன்ற அந்த குச்சி இருக்க வேண்டும். சிரமத்தின் காரணமாக அதை சரியாக மேற்கொள்ளாவிட்டால், பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்றே முடிவு வரும்.

“பிசிஆர் பரிசோதனை முடிவில் நெகடிவ்” : நம்பாதீங்க மக்களே… எச்சரிக்கும் மருத்துவர்கள்!

பிசிஆர் பரிசோதனை முடிவில் 70% பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் என வரும். அதனால் சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் எடுப்பது நல்லது. சிடி ஸ்கேன் முடிவில் கொரோனா மற்றும் நுரையீரல் பாதிப்பு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியும். அதனால் கொரோனா நெகட்டிவ் என்று வந்தால் அதை சாதாரணமாகக் கடந்து செல்ல கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.