சீனா விவகாரம்… வாய்திறக்காத பிரதமரோ குடியரசுத் தலைவரோ வேறு நாட்டிலாவது உள்ளார்களா? – ப.சி கேள்வி

 

சீனா விவகாரம்… வாய்திறக்காத பிரதமரோ குடியரசுத் தலைவரோ வேறு நாட்டிலாவது உள்ளார்களா? – ப.சி கேள்வி

சீனா இந்தியாவுக்குள் ஊடுறுவி ஏழு வாரங்கள் ஆகிறது. இது பற்றி எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதி காக்கும் பிரதமரையோ குடியரசுத் தலைவரையோ வேறு எங்காவது கண்டதுண்டா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனா விவகாரம்… வாய்திறக்காத பிரதமரோ குடியரசுத் தலைவரோ வேறு நாட்டிலாவது உள்ளார்களா? – ப.சி கேள்விஇந்தியாவின் லடாக் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 1967 சீன போருக்குப் பிறகு இரு நாட்டுக்கு இடையே அவ்வப்போது பிரச்னை வந்தது உண்டு. ஆனால் தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால் தற்போது முதன் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் முதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. உடனே சீனா தரப்பில் ஐந்து பேர் இறந்ததாக ஊடகங்கள் கூறின. தற்போது இந்தியா தரப்பில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் சீனா தரப்பில் 50 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது குறித்து வெளியிட்டுள்ள ட்வீடில், “சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஏழு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. இதுபோன்று வாய்திறக்காத பிரதமரோ குடியரசுத் தலைவரோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?

http://


இந்தியப் படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள், அவர்கள் பெயர்கள் என்ன, எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? என எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.