• November
    12
    Tuesday

Main Area

Main



மீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..!

P.Chidambaram
P.Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் சிபிஐ காவல்துறையினால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு மனு அளித்தும் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அமலாக்கத்துறையினர் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டில் பணம் கையாடப் பட்டது மற்றும் அந்த பணத்தின் முதலீடு குறித்து ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். 

P.Chidambaram

இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர்,  ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் வேண்டுமானால் அவரை கைது செய்து கொள்ளலாம் என்றும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தார். அதனையடுத்து , திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் 1 மணி நேரத்திற்கு மேல் இன்று காலை அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட பின்பு அவரை கைது செய்துள்ளனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.