கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பூசி வழங்க அரசு முடிவு!

 

கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பூசி வழங்க அரசு முடிவு!

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருந்து மக்களை காக்க அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து வந்து கொண்டே இருக்கும் நிலையிலும், இதற்கு முறையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கபட வில்லை. இந்த நிலையில் தமிழக அரசு பிசிஜி எனப்படும் தடுப்பூசி மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பூசி பிற நாடுகளில் நல்ல பலனை கொடுத்துள்ளதால் தமிழகத்திலும் இதனை கொடுக்க ஐசிஎம்ஆர் இடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பூசி வழங்க அரசு முடிவு!

பிறந்த குழந்தைகளுக்கு போடப்படும் இந்த பிசிஜி தடுப்பூசி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறதாம். டிபி நோயாளிகளுக்கு கூட இந்த மருந்து தான் கொடுக்க படுவதாக கூறப்படுகிறது. இந்த மருந்து நம் உடலில் இருக்கும் ஆன்டிபாடி தன்மையை அதிகரித்தால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நோயில் இருந்து மீண்டு விடுவார்களாம். தற்போது ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ள மருந்துகள் தான் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பிளாஸ்மா சிகிச்சைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது