கேரள காங்கிரசில் கோஷ்டிகள்.. கட்சிக்கு தேசிய தலைமை இல்லை என காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர்

 

கேரள காங்கிரசில் கோஷ்டிகள்.. கட்சிக்கு தேசிய தலைமை இல்லை என காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர்

கேரள காங்கிரசில் கோஷ்டிகள் உள்ளது ஆனால் அதனை கட்சியின் உயர்மட்ட கமிட்டி கண்டு கொள்ளாததை கண்டித்து அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சி. சாக்கோ கட்சியிலிருந்து விலகினார்.

கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதியன்று அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ திடீரென அந்த கட்சியிலிருந்து விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு முறையாக நடக்கவில்லை. கோஷ்டி ரீதியாகதான் (உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா) வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். கட்சியின் உயர்மட்ட கமிட்டி இதை கண்டுகொள்ளவில்லை. இதனை கண்டித்து நான் காங்கிரசிலிருந்து விலகுகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு தேசிய தலைமை இல்லை என்று பி.சி. சாக்கோ குற்றம் சாட்டி இருந்தார்.

கேரள காங்கிரசில் கோஷ்டிகள்.. கட்சிக்கு தேசிய தலைமை இல்லை என காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர்
காங்கிரஸ்

பி.சி. சாக்கோ கட்சியிலிருந்து வெளியேறியது குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்திய தலைவர்களில் ஒருவருமான ஆனந்த் சர்மா கூறியதாவது: வெளியேற வேண்டியவர்கள வெளியேறுவார்கள். அது அரசியல் கட்சிகளில் நிகழும். ஆனால் இந்த தேர்தலில் அது எவ்வாறு ஒற்றுமையாக போட்டியிட முடியும் என்பதை காங்கிரஸ் கட்சி காட்டும். அதுதான் காங்கிரசின் முயற்சியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரள காங்கிரசில் கோஷ்டிகள்.. கட்சிக்கு தேசிய தலைமை இல்லை என காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர்
ஆனந்த் சர்மா

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர மற்றும் இளமையான தலைவர் தேவை, கட்சி அமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா மற்றும் கபில் சிபல் போன்ற அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றனர். தற்போது பி.சி. சாக்கோவும் அதனை குறிப்பிட்டு உள்ளார் மேலும் காங்கிரசில் கோஷ்டிகள் உள்ளதை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.