#IPL2021 : பெங்களுருவை பந்தாடிய பஞ்சாப்

 

#IPL2021 : பெங்களுருவை பந்தாடிய பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திலுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

#IPL2021 : பெங்களுருவை பந்தாடிய பஞ்சாப்


டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் பிரபுசிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். சிம்ரன் சிங் 7 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அதிரடி மன்னன் கெயில் ஜேமிசன் ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசினார்.அதிரடியாக ஆடிய கோலி 24 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஹர்ப்ரிட் சிங்குடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் பந்துகளை நாலாபுறமும் விரட்டினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 98 ரன்களுடனும் ஹர்ப்ரிட் சிங் 25 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


179 என்ற கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. தேவதட் படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணி முதல் 10 ஓவரில் வெறும் 61 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்பின் கோலி 35 ரன்களிலும் மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமலும்,ஏபி டிவில்லியர்ஸ் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.அதன் பின் வந்தவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது