பேடிஎம் மால் நஷ்டம் 60 சதவீதம் குறைந்தது..

 

பேடிஎம் மால் நஷ்டம் 60 சதவீதம் குறைந்தது..

பேடிஎம் மால் நிறுவனம் கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.479 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பேடிஎம் மால் கடந்த 2019-20 நிதியாண்டுக்கான நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பேடிஎம் மால் நிறுவனம் கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.479 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2018-19ம் நிதியாண்டில் பேடிஎம் மால் நிறுவனத்துக்கு ரூ.1,171 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

பேடிஎம் மால் நஷ்டம் 60 சதவீதம் குறைந்தது..
பேடிஎம் மால்

பேடிஎம் மால் நிறுவனத்தின் சி.ஒ.ஓ. அபிஷேக் ராஜன் கூறுகையில், கடந்த நிதியாண்டில் எங்கள் யூனிட் பொருளாதாரத்தை மேம்படுத்த வணிக நடவடிக்கைகளை நாங்கள் நெறிப்படுத்தியுள்ளோம். இது நஷ்டத்தை 60ச சதவீதம் வரை குறைக்க எங்களுக்கு உதவியது. ஹைப்பர்லோகல் அவுட்ரீச் மற்றும் முன்முயற்சிகளால் லாபகரமானதக மாற எங்கள் முயற்சிகள் ஏற்கனவே எங்களுக்கு சாதகமான முடிவுகளை வழங்க தொடங்கி விட்டன என தெரிவித்தார்.

பேடிஎம் மால் நஷ்டம் 60 சதவீதம் குறைந்தது..
பேடிஎம் மால்

கடந்த நிதியாண்டில் (2019-20) பேடிஎம். மால் நிறுவனத்தின் வருவாய் ரூ.703 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் குறைவாகும். 2018-19ம் நிதியாண்டில் பேடிஎம் மால் நிறுவனத்தின் வருவாய் ரூ.968 கோடியாக உயர்ந்து இருந்தது.