பிளே ஸ்டோரில் மீண்டும் இணைக்கப்பட்டது Paytm

 

பிளே ஸ்டோரில் மீண்டும் இணைக்கப்பட்டது Paytm

மக்கள் தங்களது செல்போன் மூலமாக பணபரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் போன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான Paytm, சூதாட்ட கொள்கையை மீறியதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் போனில் வைத்திருக்கும் Paytm ஆப்-ஐ இனிமேல் அப்டேட் செய்யவோ புதிதாக பதிவிறக்கம் செய்யவோ முடியாது என தகவல்கள் வெளியானது. Paytm For Business, Paytm Money, Paytm Mall ஆகிய செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படவில்லை.

பிளே ஸ்டோரில் மீண்டும் இணைக்கப்பட்டது Paytm

இந்த செயலியை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உபயோகித்து வருவதால் மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என Paytm நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் என Paytm நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து Paytm
பிளே ஸ்டோரில் மீண்டும் இணைக்கப்பட்டது