கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலி நீக்கம்.. என்ன காரணம்?!

 

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலி நீக்கம்.. என்ன காரணம்?!

சூதாட்ட கொள்கையை மீறியதால் paytm செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நவீன காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதால், மக்களின் செல்போன்களிலேயே எல்லா தேவைகளையும் பெற்றுக் கொள்ள பல்வேறு செயலிகள் புழக்கத்தில்இருக்கின்றன. குறிப்பாக வங்கிக்கோ அல்லது ஏடிஎம்-க்கோ சென்று பணம் எடுக்க நேரம் இல்லாத மக்கள் தங்களது செல்போன் மூலமாக பணபரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் போன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலி நீக்கம்.. என்ன காரணம்?!

இந்த நிலையில் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான Paytm, சூதாட்ட கொள்கையை மீறியதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் போனில் வைத்திருக்கும் Paytm ஆப்-ஐ இனிமேல் அப்டேட் செய்யவோ புதிதாக பதிவிறக்கம் செய்யவோ முடியாது. ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இன்னும் Paytm பதிவிறக்கம் செய்ய முடிகிறதாம். அதே போல, Paytm For Business, Paytm Money, Paytm Mall ஆகிய செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றன.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலி நீக்கம்.. என்ன காரணம்?!

இந்த செயலியை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உபயோகித்து வருவதால் மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என Paytm நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.