சமையல் எரிவாயு கட்டணத்தை பேடிஎம் மூலம் செலுத்தினால் கேஷ்பேக்!

 

சமையல் எரிவாயு கட்டணத்தை பேடிஎம் மூலம் செலுத்தினால் கேஷ்பேக்!

எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளையும், கேஷ்பேக் சலுகைகளையும் வழங்கிவருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களை ஆன்லைனில் புக் செய்வது மூலம் தள்ளுபடியை வழங்கிவந்தன. இந்நிலையில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கும், குறைவான விலையில் சிலிண்டர்களை பெறவும் டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் அல்லது உடனடி தள்ளுபடி ஆகியவற்றை வழங்கிவருகின்றன. இந்த தள்ளுபடி மானிய விலையில் சிலிண்டர்களில் மட்டுமல்ல, மானியமில்லாத சிலிண்டர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு கட்டணத்தை பேடிஎம் மூலம் செலுத்தினால் கேஷ்பேக்!

அதன்படி, இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு கட்டணத்தை பேடிஎம் மூலம் செலுத்தினால் அவர்களுக்கு ஐந்து ரூபாய் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஆன்லைன் கட்டண மொபைல் பயன்பாடு, PhonePe, GooglePay போன்ற செயலிகள் மூலம் சிலிண்டர்களை வாங்குவோருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.