‘கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குக’ முஸ்லீக் லீக் கோரிக்கை

 

‘கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குக’ முஸ்லீக் லீக் கோரிக்கை

கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் பள்ளி, கல்லூரிகளை அரசு திறக்க வில்லை. தேர்வுகளைக்கூட மத்திய அரசும், மாநில அரசும் ரத்து செய்து வருகின்றன. இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கச் சொல்லி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிறுவனத் தலைவர்வி.எம்.எஸ்.முஸ்தபாவெளியிட்டுள்ளஅறிக்கையில்,

‘உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த பாதிப்புகளை ஈடுகட்ட பல நிறுவனங்கள் சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

‘கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குக’ முஸ்லீக் லீக் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவின் 80 சதவிதம் நிறுவனங்கள், பணபுழக்கம் இல்லாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் வீரியமடையாத நிலையில், அதன் தாக்கம் தற்போதே 53 சதவித நிறுவனங்களில் தெரிவதாக FICCI அமைப்பு கூறியுள்ளது. தொழிற் நிறுவனங்களை பணிபுரியும் தொழிலாளர்களை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையும் ஊரடங்கால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் முதல்கட்டமாக 2,423 பேரும், இரண்டாம் கட்டமாக 1,661 பேரும் தொகுப்பு ஊதியத்தின் கீழ் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதாமாதம் 15 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. அதாவது ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை சம்பளம் வழங்கப்படும்.

‘கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குக’ முஸ்லீக் லீக் கோரிக்கை

கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரிகள் மூடப் பட்டிருக்கின்றது. இதன்படி கடந்த மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் இருந்து அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதன் காரணமாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கவுரவ விரிவுரையாளர்களின் நிலை வேதனை அளிக்கிறது. கொரோனோ காலத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்க வேண்டுமென பலமுறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருபப்து கண்டனக்குரியது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பலர் தற்போது கூலி வேலைக்கு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களின் சிரமங்களை உணர்ந்து அரசு உடனடியாக 3மாத சம்பளத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனதமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்; என்று குறிப்பிட்டுள்ளார்.