‘போராடி கிடைத்த வெற்றி’ தேசிய கொடியேற்றி உரிமையை நிலைநாட்டினார் பட்டியலின பஞ்சாயத்து தலைவி!

 

‘போராடி கிடைத்த வெற்றி’ தேசிய கொடியேற்றி உரிமையை நிலைநாட்டினார் பட்டியலின பஞ்சாயத்து தலைவி!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அருகே இருக்கும் ஆத்துப்பாக்கம் பகுதியின் பஞ்சாயத்து தலைவர் அமிர்தத்தை கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவின் போது, தேசியக் கொடி ஏற்ற விடாமல் ஊராட்சி மன்ற செயலாளரும் அவரது ஆதரவாளர்களும் தகராறு செய்துள்ளனர். இதே போல, குடியரசு தின விழாவிலும் அவரை கொடியேற்ற விடமால் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பஞ்சாயத்து தலைவர், தனக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்றும் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

‘போராடி கிடைத்த வெற்றி’ தேசிய கொடியேற்றி உரிமையை நிலைநாட்டினார் பட்டியலின பஞ்சாயத்து தலைவி!

அந்த புகாரின் பேரில், கொடியேற்ற விடாமல் செய்த ஊராட்சி மன்ற செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனிடையே இந்த விவகாரம் மனித உரிமை ஆணையம் வரை சென்றதால், விளக்கம் கேட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், பட்டியலினம் என்பதால் கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தம், இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி அரவிந்தன் முன்னிலையில் தேசிய கோடி ஏற்றினார். கொடியேற்றிய பிறகு அமிர்தத்துக்கு ஆட்சியர் பூங்கொத்து கொடுத்த மரியாதை செய்தார். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து தனது உரிமையை நிலைநாட்டினார் அமிர்தம்.