“நோயாளி பாத்ரூமில் ,டாக்டர் வார்டு ரூமில்”- எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் மூன்று பேர் தற்கொலை ..

“நோயாளி பாத்ரூமில் ,டாக்டர் வார்டு ரூமில்”- எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் மூன்று பேர்  தற்கொலை ..

பிரபலமான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிக்கடி நடக்கும் தற்கொலைகளால் ,அங்கு என்ன நடக்கிறது என்று பலர் கேள்வி கேட்கிறார்கள் .கடந்த ஒரே மாதத்தில் மட்டும் அங்கே மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அங்கு வரும் நோயாளிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“நோயாளி பாத்ரூமில் ,டாக்டர் வார்டு ரூமில்”- எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் மூன்று பேர்  தற்கொலை ..
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு நோயாளி அறுவை சிகிச்சைக்காக வந்தார் .அவர் வந்தவுடன் அவசரமாக பாத்ரூம் போகவேண்டுமென கூறினார்.சரியென டாக்டர்கள் அவரை பாத்ரூமுக்கு போக சொன்னார்கள் .நீண்ட நேரமாகியும் பாத்ரூமிலிருந்து அவர் வெளியே வராததால் உள்ளே போய் பார்த்த ஊழியர்கள் ,அங்கு அந்த நோயாளி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள் .

“நோயாளி பாத்ரூமில் ,டாக்டர் வார்டு ரூமில்”- எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் மூன்று பேர்  தற்கொலை ..
Shadow of sad man hanging suicide. light and shadow

சென்ற வாரம் இதே போல அந்த மருத்துவமனையிலே பணிபுரிந்து வந்த ஒரு மனநல மருத்துவர் வார்டு ரூமிலேயே தற்கொலை செய்து கொண்டார் .இதே போல் போன வாரம் ஒரு நோயாளியும் தற்கொலை செய்து கொண்டதை சேர்த்து, கடந்த ஒரே மாதத்தில் இங்கு மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
இது பற்றி எய்ம்ஸ் உளவியல் துறையின் தலைவர் டாக்டர் ராகேஷ் சதா கூறுகையில், “கொரானா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு அதிக மன அழுத்தங்கள் உள்ளன.

“நோயாளி பாத்ரூமில் ,டாக்டர் வார்டு ரூமில்”- எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் மூன்று பேர்  தற்கொலை ..

ஏனெனில் அவர்கள் மனித தொடர்புகள் ஏதும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் இந்த நிலை .இதே போல சுகாதார ஊழியர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாததால் அவர்களுக்கும் இது மன அழுத்தத்தினை கொடுத்துள்ளது “என்றார் .

“கடந்த வாரம் முதல், , மனநலத் துறையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மூலம் நோயாளிகளையும் ,ஊழியர்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம் ” என்று டாக்டர் சடா மேலும் கூறினார்.