“பிளக் பாயிண்ட் இல்லை”.. ஏர் கூலர் பயன்படுத்த கொரோனா நோயாளியின் வென்டிலேட்டரை கழற்றி விட்ட குடும்பத்தினர்!

“பிளக் பாயிண்ட் இல்லை”.. ஏர் கூலர் பயன்படுத்த கொரோனா நோயாளியின் வென்டிலேட்டரை கழற்றி விட்ட குடும்பத்தினர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மருத்துவமனையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் மகாராவ் பீம் சிங், என்பவர்  ஐ.சி.யு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அங்கிருந்த மற்றொரு நபருக்கு கொரோனா இருந்துள்ளது. அதனையடுத்து பீம் சிங் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு இடம் மிகவும் சூடாக இருந்ததால், அவரது உறவினர்கள் ஏர் கூலர்  ஒன்றை வாங்கியுள்ளனர்.

“பிளக் பாயிண்ட் இல்லை”.. ஏர் கூலர் பயன்படுத்த கொரோனா நோயாளியின் வென்டிலேட்டரை கழற்றி விட்ட குடும்பத்தினர்!

அந்த வார்டில் ஏர் கூலரை பொறுத்த எந்த பிளக் பாயிண்டும் இல்லை என்பதால் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் பிளக்கை பிடுங்கிவிட்டு, ஏர் கூலரை போட்டுள்ளனர். இருப்பினும் அந்த வென்டிலேட்டர் மின்சாரம் இல்லாமல் அரை மணி நேரம் வரை இயங்கியுள்ளது. ஆனால் அதன் பிறகு வென்டிலேட்டர் வேலை செய்யாததால் அந்த நோயாளி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்சேனா மருத்துவ குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.