பதஞ்சலி மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறவே இல்லை! – பல்டி அடித்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா

 

பதஞ்சலி மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறவே இல்லை! – பல்டி அடித்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா

எங்களுடைய மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறவே இல்லை என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதஞ்சலி மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறவே இல்லை! – பல்டி அடித்த ஆச்சார்யா பாலகிருஷ்ணாகொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறி பதஞ்சலி நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் செய்தது. பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது பற்றி எங்களிடம் தகவல் இல்லை, இது தொடர்பாக விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்தது.
காய்ச்சல், சளி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து தயாரித்துள்ளோம் என்று கூறி உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேத துறையில் அனுமதி பெற்று கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து என்று விளம்பரம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பதஞ்சாலி நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பதஞ்சலி மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறவே இல்லை! – பல்டி அடித்த ஆச்சார்யா பாலகிருஷ்ணாஇந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று பதஞ்சலி கூறவே இல்லை என்று அதன் தலைமை செயலாக்க அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எங்களின் மருந்து (கொரோனில்) கொரோனாவைக் குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்று நாங்கள் கூறவில்லை.

http://

நாங்கள் தயாரித்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்தபோது அவர்கள் குணமானார்கள் என்று மட்டுமே கூறினோம். இதில் எந்த குழப்பமும் இல்லை” என்றார்.