வேதங்களை கவனமாக படித்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சிருக்கோம்- பதஞ்சலி நிறுவனம்

 

வேதங்களை கவனமாக படித்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சிருக்கோம்- பதஞ்சலி நிறுவனம்

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன.

வேதங்களை கவனமாக படித்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சிருக்கோம்- பதஞ்சலி நிறுவனம்

இந்நிலையில் கொரோனா நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த மருந்தை வைத்து 1000 பேரை குணப்படுத்திவிட்டதாகவும் பதஞ்சலி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் துனை நிறுவனரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பதஞ்சலி நிறுவனத்தின் ஒவ்வொரு துறையும் மருந்து கண்டுபிடிக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தன. அதன்விளைவாக கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடித்து 1000 பேரை குணப்படுத்திவிட்டோம், வேதங்களை கவனமாக படித்து அதில் கூறப்பட்டிருக்கும் சூத்திரங்களை கொண்டு இந்த மருந்தை உருவாக்கியுள்ளோம். தற்போது அரசு விதிமுறைப்படி பதஞ்சலி மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது” என விளக்கமளித்தார்.