‘ஆரோக்கிய சேது’வில் சிவப்பா? அப்ப விமானத்தில் ஏற முடியாது- மத்திய அரசு

 

‘ஆரோக்கிய சேது’வில் சிவப்பா? அப்ப விமானத்தில் ஏற முடியாது- மத்திய அரசு

உள்நாட்டு விமான போக்குவரத்து மே.25 முதல் தொடங்கவுள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ஆரோக்கிய சேது ஆப்பில் பயணிகள் நிலை சிவப்பாக காட்டினால் அவர் விமானத்தில் பயணிக்க முடியாது. பயணிக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யவே ஆரோக்கிய சேதுவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி அவசியம்.

‘ஆரோக்கிய சேது’வில் சிவப்பா? அப்ப விமானத்தில் ஏற முடியாது- மத்திய அரசு

உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500, அதிகபட்சம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவில் 3 மாதங்களுக்கு உள்நாட்டு விமான கட்டணங்களை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து மும்பை செல்ல சராசரி கட்டணம் ரூ.6,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணங்கள் மிகவும் அதிகரிக்க கூடாது என்பதால் கட்டணம் நிர்ணயம் செய்கிறது. பல்வேறு நாடுகளில் சிக்கிய 20 ஆயிரம் இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டுள்ளோம். உள்நாட்டு விமான சேவை கட்டணங்கள் கட்டுக்குள் வைக்கப்படும். அதிகபட்ச கட்டணம், குறைந்த பட்ச கட்டணம் என இரண்டையும் வரையறுத்து பட்டியலிடப்படும்” என தெரிவித்தார்.