பயணிகள், புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு! 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கம்

 

பயணிகள், புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு! 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கம்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையிலும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கையை தெற்கு ரயில்வே நீட்டித்து அறிவித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் நேற்று வெளியான தகவலை ரயில்வே அமைச்சகம் மறுத்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்படுவதாக ரயில்வே இன்று அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும், மும்பையில் மட்டும் தேவைக்கு ஏற்ப உள்ளூர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.