”செப்டம்பரில் பயணிகள் ரக வாகன விற்பனை – 26 % வளர்ச்சி”-டுவீலர் – 11 %உயர்வு!

 

”செப்டம்பரில் பயணிகள் ரக வாகன விற்பனை – 26 % வளர்ச்சி”-டுவீலர் – 11 %உயர்வு!

கடந்த செப்டம்பரில் பயணிகள் ரக வாகனங்கள் விற்பனை 26.45 சதவீதம் அதிகரித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.

”செப்டம்பரில் பயணிகள் ரக வாகன விற்பனை – 26 % வளர்ச்சி”-டுவீலர் – 11 %உயர்வு!

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பரில் பயணிகள் ரக வாகனங்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 27 என்ற அளவில் விற்பனையாகி உள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 26.45 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2019ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், 2 லட்சத்து 15 ஆயிரத்து 124 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.

இதனிடையே, கடந்த செப்டம்பரில், பயணிகள் ரக வாகனங்களின் ஏற்றுமதி 39 ஆயிரத்து 146 என்றளவில், 35.89 சதவீத சரிவை கண்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க செப்டம்பரில் டூவிலர் விற்பனை 11.64 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில், 16 லட்சத்து 56 ஆயிரத்து 658 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில் 18 லட்சத்து 49 ஆயிரத்து 546 டூவிலர்கள் விற்பனையாகி உள்ளதும் சியாம் சங்கத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

”செப்டம்பரில் பயணிகள் ரக வாகன விற்பனை – 26 % வளர்ச்சி”-டுவீலர் – 11 %உயர்வு!

இதில் மோட்டார் சைக்கிள் விற்பனை மட்டும் 12 லட்சத்து 24 ஆயிரத்து 117 என்றளவில்
17,30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 5 லட்சத்து 56 ஆயிரத்து 205 என்றளவில் 0.08 சதவீதம் உயர்ந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை செப்டம்பரில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 233 என்றளவில் 9.17 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளநு.

  • எஸ். முத்துக்குமார்