அக்டோபரில் கார் சில்லரை விற்பனை 8.8 % சரிவு

 

அக்டோபரில் கார் சில்லரை விற்பனை 8.8 % சரிவு

பண்டிகை கால விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபரில் கார்களின் சில்லரை விற்பனை 8.8 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அக்டோபரில் கார் சில்லரை விற்பனை 8.8 % சரிவு

இது தொடர்பாக வாகன டீலர்களுக்கான சங்க கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது, கார்களின் சில்லரை விற்பனை 8.8 சதவீதமும், மோட்டார் சைக்களின் சில்லரை விற்பனை 26.8 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பழைய மாடல்களை விட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்கள் சிறப்பான விற்பனையை அடைந்துள்ளதாகவும், தொடக்க நிலை பைக்குகளின் விற்பனை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் கார் சில்லரை விற்பனை 8.8 % சரிவு

அந்த கூட்டமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாடி கூறுகையில், நடப்பாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் தள்ளுபடி வழங்கியதும் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு அக்டோபருடன் பண்டிகை காலம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பரிலும் தொடர்வதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

அக்டோபரில் கார் சில்லரை விற்பனை 8.8 % சரிவு

கொரோனா தொற்று காரணமாக கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை பெரும் சரிவை சந்தித்து படிப்படியாக பின்னர் மீண்டது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் அக்டோபரில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் சில்லரை விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்