வாட்டியெடுக்கும் வெயில் பிரச்சினைகளை விரட்டியடிக்கும் பசலை கீரை

 

வாட்டியெடுக்கும் வெயில் பிரச்சினைகளை விரட்டியடிக்கும் பசலை கீரை

பொதுவாக கீரைகள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது .அதிலும் பசலைக்கீரையில் நம் உடலுக்கு தேவையான பலசத்துக்கள் உள்ளது .மேலும் அந்தரங்க பிரச்சினைகள் பலவற்றை இது சரி செய்யும் வல்லமை பெற்றது

வாட்டியெடுக்கும் வெயில் பிரச்சினைகளை விரட்டியடிக்கும் பசலை கீரை

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை  சரி செய்ய நினைத்தால் பசலைக்கீரையை அவ்வபோது சேர்த்து வரலாம். இது வயிற்றுக்கோளாறையும் நீக்க கூடியது. பொதுவாக கீரைகள் குடலில் அடைந்திருக்கும் கழிவுகளை வெளியேற்ற கூடியவை. பசலைக்கீரையும் உடல் கழிவுகளை வெளியேற்றி வயிற்றுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றவும் உதவி செய்கிறது.

வெயில்காலத்தில் சிறுநீர்க்கட்டு, சிறுநீர் கடுப்பு உண்டாகும். பசலைக்கீரையை பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் வெப்பம் நீங்கி நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவற்றை குணப்படுத்தும். இந்த கீரை கொண்டு ஆசன வாய் பகுதியில் உண்டாகும் புண், எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்த செய்கிறது.

வாட்டியெடுக்கும் வெயில் பிரச்சினைகளை விரட்டியடிக்கும் பசலை கீரை

கோடைகாலங்களில் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். உடல் உஷ்ணத்தை தணித்து உடல்கோளாறுகளை தவிர்க்க இந்த கீரை உதவும். பசலைக்கீரை தாகம் தணிக்கும் வல்லமை கொண்டவை. கோடைக்கால நோயான சூட்டு கொப்புளங்கள், வியர்க்குரு பிரச்சனைகளுக்கு பசலைக்கீரை நல்ல தீர்வாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு தேவையான  சத்தை பெறுவதற்கு கீரைகள் தவிர்க்காமல் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். இந்த ஃபோலிக் சத்தை நிறைவாக பெறுவதற்கு பசலக்கீரை உதவுகிறது

பசலைக்கீரையில் நிறைந்துள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகள் மற்றும் பற்களை வலிமைபடுத்துகிறது  இதில் இருக்கும் வைட்டமின் “கே”  எலும்புக்கு வலிமை அளிக்கிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த பசலைக்கீரையை குழம்பாகவோ, அல்லது சூப் போன்றோ ,அல்லது ஜூஸாக்கியோ கொடுத்துவந்தால் எலும்பும், பற்களும் உறுதியாக பெற்று வளர்வார்கள். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் இதை சரி செய்ய பசலைக்கீரையை அதிகமாக சேர்த்து வரலாம்.