கட்சி ஆரம்பிச்சாச்சு.. தொண்டர்களுக்கு எங்கே போவது..? புது திண்டாட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

கட்சி ஆரம்பிச்சாச்சு.. தொண்டர்களுக்கு எங்கே போவது..? புது திண்டாட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

யாரும் எதிர்பாராத வண்ணம் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார் விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.அவர் கட்சி ஆரம்பித்தது சரி..அந்தக் கட்சிக்கு தொண்டர்கள் யார்..?எங்கே இருகிற்ரகள்..? என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியலில் இது புதுக் காமெடியாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கட்சி ஆரம்பிச்சாச்சு.. தொண்டர்களுக்கு எங்கே போவது..? புது திண்டாட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மைய பலமே விஜய் ரசிகர்கள்தான். கட்சியையும் விஜய் பெயரிலேயே தொடங்கியிருக்கிறார். ஆனால் இதில் சம்பந்தப்படவேண்டிய நடிகர் விஜய்யோ “என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. எனது ரசிகர்கள் வழக்கம் போல இயக்கப் பணிகளைக் கவனிக்க வேண்டும். எனது பெயரையோ, புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும்போதும்… “விஜய்யின் பெயரில் கட்சி தொடங்கி இருப்பது உண்மைதான். ஆனால் கட்சிக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை” என்றார்.

கட்சி ஆரம்பிச்சாச்சு.. தொண்டர்களுக்கு எங்கே போவது..? புது திண்டாட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

அப்படியானால்“அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” கட்சியின் நிர்வாகிகள் யார்? யார்? அதன் தொண்டர்கள் யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.தமிழகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கென்று ரசிகர் மன்றம் எதுவும் கிடையாது.விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மட்டும்தான் அவருடன் தொடர்புடையவர்கள்.அவர்களையும் தனது கட்சிக்கு அழைக்க முடியாது .காரணம், இயக்கத்தை உடைப்பதால் தந்தை மகனுக்குச் செய்த துரோகம் ஆகி விடும்..ஆக மொத்தத்தில் ஆளே இல்லாமல் கட்சி ஆரம்பித்த காமெடிக் காட்சி இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கட்சி ஆரம்பிச்சாச்சு.. தொண்டர்களுக்கு எங்கே போவது..? புது திண்டாட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

மகன் விஜய்யின் ரசிகர்களைக் கணக்கில் வைத்துதான் எஸ்.ஏ சந்திரசேகர் கட்சியை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் விஜய் இப்படி காலை வாரி விடுவார் என்பதை அவர் எதிர்பார்க்க வாய்ப்பில்லை வில்லை.தற்போது விஜய்க்கும் தனது கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறார். அப்படியானால் எதற்காக விஜய் பெயரில் கட்சி தொடங்க வேண்டும் ? எஸ்.ஏ.சந்திரசேகர் முன்னதாக தனது மகன் விஜய்யுடன் ஆலோசனை நடத்திய பிறகு கட்சி தொடங்கியிருக்கலாம். ஏதோ விஜய் ரசிகர்கள் எல்லாம் தனக்குப் பின்னால் இருப்பது போல அவசரப்பட்டு விட்டார் என்கிறார்கள் அவர்கள்.