அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

 

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

அமைச்சர் துரைக்கண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசையும், வேளாண் துறை அமைச்சர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் என தவாக தலைவர் வேல்முருகனும், அமைச்சர் துரைக்கண்ணு எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கும் பண்பாளர் என மதிமுக தலைவர் வைகோவும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

மேலும், துரைக்கண்ணு மறைவு தஞ்சை மாவட்டத்திற்கும் அதிமுகவிற்கும் பேரிழப்பாகும் என த.மா.க தலைவர் வாசனும், அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.