வேளாண் மசோதாக்கள்: விதிமுறைகள் புத்தகங்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

 

வேளாண் மசோதாக்கள்: விதிமுறைகள் புத்தகங்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

மத்திய அரசு தாக்கல் செய்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்றை தொடர்பான 3 மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனை எதிர்த்த பாஜக கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிதளம் கட்சி, மக்களவையில் மசோதாக்களுக்கு எதிராக வாக்களித்தது. மேலும், அக்கட்சியின் எம்.பி ஹர்சிம்ரத் கவுர் பதவியை ராஜினாமா செய்தார்.

வேளாண் மசோதாக்கள்: விதிமுறைகள் புத்தகங்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் மசோதாக்களை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று காலை தாக்கல் செய்த பிறகு, பேசிய அவர் விவசாயிகளின் நலனுக்காக இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். இதனைத்தொடர்ந்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எம்.பிகள் எழுப்பிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதன் பின்னர், அவையில் திடீரென எழுந்து சென்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மாநிலங்களவை தலைவர் இருக்கைக்கு அருகே நின்று கொண்டு அமளியில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல், மாநிலங்களவைக்கான விதிமுறை புத்தகங்களை கிழித்தெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், மைக்குகளையும் உடைக்க முற்பட்டு அவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.