தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் பார்த்திபனா? #ValimaiUpdate

 

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் பார்த்திபனா? #ValimaiUpdate

அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தை சதுரங்க வேட்டை பட இயக்குநர் வினோத் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமையில் ஹூமா குரேசி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார். இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ எனும் படத்தில் நடித்திருந்தார். வலிமை இருவரும் இணையும் இரண்டாம் படம்.

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் பார்த்திபனா? #ValimaiUpdate

விரைவாக படமாக்கத்தில் ஈடுபடும் வினோத், கொரோனா லாக்டெளன் முடக்கத்தால் வலிமை பட பணிகளை நிறுத்த வேண்டியதாயிற்று.

ஒரு பக்கம் விஜய் தனது மாஸ்டர் பட அப்டேட்டுகளை அளித்துக்கொண்டே இருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இதனால் படக்குழுவே நாங்கள் அப்டேட் தரும்வரை பொறுத்திருங்கள் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் ஒரு செய்தி கசிந்திருக்கிறது. நடிகர் பார்த்தீபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோவை பதிவிட்டு இந்தப் போட்டோவை எடுத்தது Mr AK என்று குறிப்பிட்டுள்ளார்.

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் பார்த்திபனா? #ValimaiUpdate

நடிகர் பார்த்தீபன் பதிவில் “‘அலையும் தலைமுடி, அழித்தும் அழிக்காத ஒப்பனை, அழகாய்தான் உள்ளது எடுத்துக்கொள்ளவா ஒரிரு photos” என
Mr AK கேட்டு, சுட்டுத்தள்ளினார் ஏழெட்டு. அதில் எனக்கேப் பிடித்தது இது.விரைவில் இன்னும் பேசப்பட வாழ்த்துகள்!” எனக்கூறியிருக்கிறார்.

AK என்பது அஜித்குமார் என்பது அவரின் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். விவேகம் படத்தில் அஜித்தின் பெயர் AK என்றே அமைக்கப்பட்டிருக்கும். மேலும், அஜித்க்கு போட்டோகிராபி ரொம்பவே பிடிக்கும். ஏற்கெனவே நடிகர் அப்புக்குட்டியை வைத்து அவர் எடுத்த போட்டோ சூட் எல்லோருக்கும் தெரியும்.

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் பார்த்திபனா? #ValimaiUpdate

எனவே, பார்த்தீபன் இந்தப் பதிவு அஜித் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இருந்தாலும் சிலருக்கு சந்தேகம் AK என்பது யார்… AK என்பது யார் என்று கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.

வழக்கமாக பார்த்தீபன் வித்தியாசமாகச் செய்பவர் என்று பெயர் பெற்றவர். அதுபோல இந்தப் போட்டோவும் AK என்று வரும் வேறு யாரேனும் ஒருவரைச் சொல்லிவிடுவாரோ என்பதால் அப்படிக் கேட்கிறார்களோ என்னவோ?

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் பார்த்திபனா? #ValimaiUpdate

வலிமை அப்டேட் குறித்து காத்து கிடந்த தல அஜித் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி உண்மையானால், உற்சாகமாகக் கொண்டாடி விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.