23 தொகுதிகள் வரைக்கும் இறங்கிவந்துட்டோம் ஆனால்… தேமுதிக பார்த்தசாரதி

 

23 தொகுதிகள் வரைக்கும் இறங்கிவந்துட்டோம் ஆனால்… தேமுதிக பார்த்தசாரதி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுகவும், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாமக, பாஜகவுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

23 தொகுதிகள் வரைக்கும் இறங்கிவந்துட்டோம் ஆனால்… தேமுதிக பார்த்தசாரதி

அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்தது. அதிமுக- தேமுதிக இடையேயான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் இன்று மாலை இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் சென்னையில் உள்ள லீலா பேலசில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, “முதலில் 41 இடங்கள் கேட்டோம். 23 தொகுதிகள் வரை தற்போது நாங்கள் இறங்கி வந்துள்ளோம். தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை, எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளது. அதிமுகவுடனான கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்கிறோம். தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நீடிக்கிறது. தொகுதிப் பங்கீட்டில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” எனக் கூறினார்.