பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்…

 

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இருப்பினும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்…

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் திரு. ஏ.ஜி. பேரறிவாளன் (சிறைக் கைதி எண் 7640) அவர்களுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் திருமதி டி. அற்புதம்மாள் அவர்கள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திரு. ஏ.ஜி. பேரறிவாளன் அவர்களுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.