கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு?

 

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு?

நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், மழைக்கால கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதியன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமூக இடைவெளி, தடுப்பு உள்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், இதுவரை 2 மத்திய அமைச்சர்கள், 30 எம்.பி.க்கள் மற்றும் சில நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களுக்கு கோவிட்-19 இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு?
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்து கட்சிகளின் அவரச பிசினஸ் ஆலோசனை குழு கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் அமர்வை குறைக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் அமர்வை எத்தனை நாட்கள் குறைக்கவேண்டும் என்பதை சபாநாயகரின் விருப்பத்துக்கு விடப்பட்டதாக தகவல்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு?
மக்களவை

வரும் புதன்கிழமைக் தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 20 மசோதாக்களில் 11 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 5 மசோதாக்களுக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு 8 தினங்களுக்கு முன்பே முடிவுக்கு வர உள்ளதால் எஞ்சிய மசோதாக்கள் நீண்ட விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.