நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : ஜனாதிபதி உரையை புறக்கணிக்க திமுக , உள்பட 19 எதிர்க்கட்சிகள் முடிவு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : ஜனாதிபதி உரையை புறக்கணிக்க திமுக ,  உள்பட 19 எதிர்க்கட்சிகள் முடிவு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : ஜனாதிபதி உரையை புறக்கணிக்க திமுக ,  உள்பட 19 எதிர்க்கட்சிகள் முடிவு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. நேரம் இல்லாத நேரம், கேள்வி நேரம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கூட்டத்தொடரில் இடம்பெறுகின்றன. கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி உரையை புறக்கணிக்க திமுக , காங்கிரஸ் உள்பட 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. வேளாண்சட்டங்களை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் ராம்நாத் உரையை புறக்கணிக்கின்றனர். நாளை முதல் மாநிலங்களவை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரையும், மக்களவை மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரையும் நடைபெறும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : ஜனாதிபதி உரையை புறக்கணிக்க திமுக ,  உள்பட 19 எதிர்க்கட்சிகள் முடிவு!

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் வரும் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களை கடந்தும் நடக்கும் விவசாயிகளின் போராட்டம், பொருளாதார வீழ்ச்சி, கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.