கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு

கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு

நாடாளுமன்ற வளாகத்தில் பாத்திரங்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களை கழுவ கூடாது என்று அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் உணவு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் வேலைபார்க்கும் பலர் வீட்டிலிருந்து கொண்டு உணவு கொண்டு வருகின்றனர்.

கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு
உணவு பாக்ஸ்கள்

தற்போது அவர்களுக்கு புதிதாக எதிர்பாராத பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து உணவை கொண்டு வருபவர்கள் சாப்பிட்ட பின் தட்டு மற்றும் மதிய உணவு கொண்டு வந்த பாக்ஸை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாஷ்ரூம்களில் கழுவது வாடிக்கை. ஆனால் இனி கையை மட்டும்தான் கழுவ வேண்டும் பாத்திரங்கள், டிபன் பாக்ஸ்களை கழுவக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு
நாடாளுமன்ற கேண்டீன் பணியாளர்கள்

இது தொடர்பாக மக்களை செயலகம் வெளியிட்டுள்ள உள் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடாளுமன்ற வளாகத்தின் வாஷ்ரூம்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாத்திரங்கள் மற்றும் மதிய உணவு பெட்டிகளை (டிபன் பாக்ஸ்) கழுவுகின்றனர். இது வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்படுவதற்கும், பயன்படுத்துபவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுதவிர தூய்மை மற்றும் சுகாதார தரத்தை மோசமடைய செய்கிறது. ஆகையால் இனி அவர்கள் தங்கள் பாத்திரங்களையும், மதிய உணவுப் பெட்டிகளையும் கழுவுவதைத் தவிர்க்கவும். மேலும் போதுமான அளவிலான தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதில் ஒத்துழைக்கவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.