ஜன.29ல் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் : பிப்.1 பட்ஜெட் தாக்கல்!

 

ஜன.29ல் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் : பிப்.1 பட்ஜெட் தாக்கல்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 27ம் தேதி தொடங்கவிருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கம். இவை மூன்றும் 6 மாதங்களுக்கு மேல் இடைவெளியின்றி நடத்தப்பட வேண்டும். அதன் படி, கடந்த செப்.14ம் தேதி கூட்டப்பட்ட மழைக்கால கூட்டத்தொடர் அக்.1 தேதி முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் செப்.23ம் தேதியே முடிந்தது. இதைத் தொடர்ந்து, வழக்கமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தெரிவித்திருந்தார்.

ஜன.29ல் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் : பிப்.1 பட்ஜெட் தாக்கல்!

இந்த நிலையில், பிப்.1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட விருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 தேதி தொடங்கி, முதல் அமர்வு பிப்.15ம் தேதி வரை நடைபெறவிருப்பதாகவும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாம் அமர்வு நடைபெறவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜன.29ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார் என்றும் தெரிவித்துள்ளது.