‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

 

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம், இனவெறிக்கு எதிரான உத்தரவு, இஸ்லாமியர்களுக்கான தடை நீக்கம், மெக்சிகோ சுவர் உள்ளிட்ட அதிமுக்கியமான 15 கோப்புகளில் அதிவேகமாக புதிய அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சர்ச்சைக்குள்ளான விவகாரங்களுக்கு முடிவு கட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். ஒரு பெண் துணை அதிபராவது இது தான் முதல்முறை. பைடன் அதிபராவதற்கு முன்பே 10க்கும் மேற்பட்ட கோப்புகளில் கையெழுத்திடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் நாளிலேயே முக்கியமான 15 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். மற்ற அதிபர்களைக் காட்டிலும் பைடன் அதிவேகமாக கையெழுத்திட்டுள்ளார். டிரம்பின் பல்வேறு கொள்கைகளால் நாடு இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியேற்ற உடன் 8 கோப்புகளிலும் ஒபாமா 9 கோப்புகளிலும் கையெழுத்திட்டிருந்தனர்.

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா!

டிரம்பின் கொள்கைகளை மாற்றியமைக்கும் வண்ணம் இருந்த அனைத்து கோப்புகளிலும் பைடன் கையெழுத்திட்டார். அதில் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்து முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களை தடுப்பதற்காக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி 196 உலக நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. முன்னாள் அதிபர் டிரம்ப் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அதில் மீண்டும் அமெரிக்கா இணையும் என்பது குறித்த கோப்பில் பைடன் கையெழுத்திட்டுள்ள்ளார்.

இனவெறிக்கு எதிரான உத்தரவு!

ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட் இனவெறியால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது அனைவரும் அறிந்ததே. அதன் எதிரொலியாக இனவெறிக்கு வலு சேர்க்கும் டிரம்பின் உத்தரவுகளை பைடன் ரத்துசெய்துள்ளார். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து விலக்கிய டிரம்பின் உத்தரவுகளை ரத்து செய்திருக்கிறார்.

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

அமெரிக்காவின் அனைத்து துறைகளிலும் இன சமத்துவத்தைப் பின்பற்றி கூட்டாட்சி தத்துவத்தைக் காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு ஊழியரும் செயல்பட வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார். குறிப்பாக, பணியிடங்களில் ஒடுக்குதலுக்குள்ளாக்கப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களை (LGBTQ) பாதுகாக்கும் சமீபத்திய அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கான தடையை நீக்கிய பைடன்!

டிரம்பின் ஆட்சிக்காலத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது, இஸ்லாமிய நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்கா வருவதற்கு போடப்பட்ட தடை உத்தரவே. தற்போது அதனை ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறார் பைடன். மீண்டும் அந்த நாடுகளிலிருந்து விசா சேவையைத் தொடங்கவும், அம்மக்களை தீவிர சோதனையிட வேண்டும் என்ற நடைமுறையை மாற்றவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

மாஸ்க் அணிவது அனைவருக்கும் கட்டாயம்!

அதிபராக டிரம்ப் இருந்தபோது அவர் நீண்ட நாள்களாக மாஸ்க் அணியாமல் அடம்பிடித்து வந்தார். உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியும் மாஸ்க் அணிய மறுத்தார். கொரோனாவை அலட்சியமாகவே கையாண்டார். விளைவாக உலகிலேயே அதிக பாசிட்டிவ் கேஸ்களை வாங்கி குமித்தது அமெரிக்கா தான்.

இதனைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசு ஊழியர்கள் முதல் சாமன்யர்கள் வரை அனைவரும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து மாஸ்க் அணிய வேண்டும் என பைடன் ஆணையிட்டுள்ளார்.

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

அதேபோல, உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகப்போவதற்கான செயல்பாடுகளையும் பைடன் தடுத்துநிறுத்திவிட்டார். மேலும், ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்கும் குழுவில் இணைய பைடன் அரசு ஆர்வம் காட்டிவருகிறது.

லைபிரியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் காலம் நீட்டிப்பு!

டிரம்பின் குடியேற்ற கொள்கைகளிலும் சில மாறுதல்களை பைடன் கொண்டுவந்திருக்கிறார். அதன்படி உள்நாட்டு போராலும், எபோலா வைரஸ் பாதிப்பாலும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த லைபிரியர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான தற்காலிக அனுமதியை பைடன் உறுதிசெய்துள்ளார். ஜூன் 2022 வரை நீட்டித்துள்ளார்.

மெக்சிகோ சுவர் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்த பைடன்!

டிரம்ப்பின் மெக்சிகோவில் சுவர் எழுப்பும் உத்தரவுக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பலை உருவாகியது. ஆனால் அதிலிருந்து பின்வாங்காமல் சுவர் எழுப்பும் பணியை தீவிரப்படுத்தினார். தற்போது அந்த கட்டுமானப் பணிகளை பைடன் தடைசெய்து உத்தரவிட்டுள்ளார்.

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

எனினும், டிரம்பின் எல்லை கொள்கைகளை மாற்றுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என பைடனின் உதவியாளர்கள் கூறியுள்ளனர். புகலிடம் கோரி அமெரிக்க குடியேற்ற நீதிமன்றத்தில் விசாரணைக்காக மெக்சிகோவில் காத்திருப்பவர்களின் விவகாரமும் இதில் அடங்கும்.

இதேபோல டிரம்பின் பல்வேறு கொள்கைகளை மாற்றுவதற்குண்டான ஏற்பாடுகளை பைடன் அரசு துரிதமாக செயல்படுத்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுவருகின்றன.

ஹெச் 1 பி விசா மீதான தடை நீக்கம் தாமதம்!

இந்தியர்களுக்கு முக்கியமான ஹெச் 1 பி விசா தடையை நீக்குவதற்கான கோப்புகளில் பைடன் இன்னும் கையெழுத்திடவில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, அவர் முதல் நாளிலேயே தடையை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

அதற்கும் சில காலங்கள் பிடிக்கலாம் என்று தெரிகிறது. பைடன் தனது நிர்வாகத்தில் 20 அமெரிக்க-இந்தியர்களை பணியமர்த்திருப்பது கவனித்தக்கது.