குழந்தைகள் புத்திசாலியாக வளர கோழி ரத்தம் கொடுக்கும் பெற்றோர்கள்

 

குழந்தைகள் புத்திசாலியாக வளர கோழி ரத்தம் கொடுக்கும் பெற்றோர்கள்

குழந்தைகள் எவ்வளவு தான் நல்ல உடல்நிலையை பெற்றிருந்தாலும் திறமையானவர்களாக இருந்தாலும் அதில் முழு திருப்தி அடையாத அமெரிக்க பெற்றோர்கள் பலரும் ‘ஹெலிகாப்டர் பேரன்டிங் ’என்கிற பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். அதாவது குழந்தைகளை வெவ்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்து அவர்களை படித்தி எடுப்பதுதான் இந்த ஹெலிகாப்டர் பேராண்டிங் என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகள் புத்திசாலியாக வளர கோழி ரத்தம் கொடுக்கும் பெற்றோர்கள்

அதேபோல் சீனாவிலும் ‘சிக்கன் பேரன்டிங்’ என்கிற வளர்ப்பு முறை தற்போது பிரபலமாகி வருகிறது. கோழிகளின் ரத்தத்தை ஊசிகள் மூலம் குழந்தைகளுக்கு செலுத்தி வருகின்றனர் பெற்றோர். இதன் மூலம் அந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் சிறந்த திறமையாளர்களாகவும் வளர்வார்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த கோழி ரத்தம் செலுத்துவதால் உயர் செயல்திறன் கொண்ட குழந்தைகளாக மாறுகிறார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடையே இருந்து வருகிறது. கல்வி ,விளையாட்டு போன்றவற்றில் சிறந்தவர்களாக விளங்க இந்த கோழி ரத்தம் அவர்களுக்கு சக்தியை கொடுக்கிறது என்று அவர்கள் நம்பி வருகிறார்கள். மேலும் குழந்தை வளர்ந்த பிறகு புற்றுநோய் , வழுக்கை போன்ற பிரச்சினைகளில் இருந்தும் இந்த கோழி ரத்தம் அவர்களே காப்பாற்றுகிறது என்று மக்கள் சீன மக்கள் நம்பி வருகின்றனர்.

சமீபத்திய ஆய்வுகளின்படி சீன இளைஞர்கள் இடையே மன அழுத்தம் அதிகரித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. குழந்தையிலேயே கோழி இரத்தம் செலுத்தினால் பின்னாளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வராமல் இருக்கும் என்று சிக்கன் பேரன்டிங் முறையை சீனாவில் பல நகரங்களில் பின்பற்றி வருகின்றனர்.