கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது – தமிழக அரசு

 

கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது  – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பல தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமலும் வருமானமில்லாமலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வீட்டு வாடகை, இ.எம்.ஐ உள்ளிட்ட உள்ளிட்ட மாத செலவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது  – தமிழக அரசு

இதனிடையே, பல கல்வி நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், கல்விக் கட்டணத்தை செலுத்த வற்புறுத்த வேண்டாம் என்றும் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது எனவும் பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.