ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததால் கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

 

ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததால் கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

நெல்லை

நெல்லை அருகே ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தக் கூறி பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சீதபற்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் முத்து ரஞ்சினி(18). இவர் தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், முத்து ரஞ்சினி படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததால் கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

இதனால் அவரை, பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்து ரஞ்சினி கடந்த 17ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முத்து ரஞ்சனி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, ராஜதுரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.