• March
    31
    Tuesday

Main Area

Main



வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்த பெண்… கொன்று குளத்தில் வீசிய குடும்பத்தினர்… அதிரவைக்கும் ஆணவக்கொலை!

Sheetal Chaudhary
Sheetal Chaudhary

தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை கூட  இல்லாத ஓர் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தான் விரும்பிய பையனை கல்யாணம் செய்து கொண்ட இந்த பெண்ணிற்கு நடந்த கொடுமை நம்மை உறைய வைக்கிறது. டெல்லியின் நியூ அசோக் நகரில் தங்கள் பெண்ணையே ஒரு குடும்பம் ஆணவக் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த இளம்பெண்  தனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் ஒரு பையனை காதலித்து வந்திருக்கிறாள் மூன்று ஆண்டுகளாக இவர்கள் தங்கள், குடும்பத்திற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில், இருவரும் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

honour-killing-family-01

சிறிது நாட்கள் கழித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை தங்களுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அனால் அந்த பெண் சம்மதிக்கவில்லை.  இதனால் அந்த பெண்ணை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். ஜனவரி 30 ஆம் தேதி இரவில், அந்த பெண்ணின் குடும்பத்தினர்  தங்கள் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். அதோடு அவர்கள் வெறி அடங்கவில்லை. பின்னர் முழு குடும்பமும் அவரது உடலை 80 கிலோமீட்டர் தூரம் காரில் எடுத்துச்சென்றனர். பின் அவர்கள் பெண்ணின் உடலை ஜாவா பகுதியில் உள்ள ஒரு ஏரியில் தூக்கியெறிந்தனர்

கொலை செய்யப்பட்ட பெண்ணை கல்யாணம் செய்த அந்த பெண்ணிற்கு மனைவிக்கு நடந்த கொடுமையைப் பற்றித் தெரியவில்லை. தன் மனைவியை கூடி வர்க் சென்ற போது எதோ தவறு நடந்திருப்பதாக தெரிந்திருக்கிறது. பெண்ணின் மொபைலுக்கு போன் செய்து பார்த்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

honour-killing-family
Source: TOI

உடனடியாக புதிய அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார் . இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரித்தபோது பெண் தங்கள்உறவினர் வீட்டிற்குச் சென்றதாகக் கூறியுள்ளனர். அந்த பெண்ணின்  அழைப்பு விவரங்களை பார்த்தபோது அந்த குடும்பம் சிக்கியுள்ளது. அடுத்தடுத்த விசாரணையில், அவரது சொந்த குடும்பத்தினரால் பெண் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 குடும்ப உறுப்பினர்களும் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

2018 TopTamilNews. All rights reserved.