அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

 

அண்ணாமலையார் கோயிலில்  பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில்  பரணி தீபம் ஏற்றப்பட்டது!

சிவ தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இத்திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையில் இன்று மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக 3 ஆயிரத்து 500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட உள்ளன.

அண்ணாமலையார் கோயிலில்  பரணி தீபம் ஏற்றப்பட்டது!

இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக இன்று அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. முதல்முறையாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது