தமிழக பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் காலமானார்!

 

தமிழக பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் காலமானார்!

தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய தொ.பரமசிவன் உடல் நலக்குறைவால் காலமானார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 70.

பரமசிவன் தமிழில் இயங்கி வரும் முக்கிய பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர். தந்தையார் பெயர் தொப்பா தாஸ், தாயார் பெயர் லட்சுமி. பண்பாடு சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் பெரியாரிய தத்துவங்களை அடிப்படையைக் கொண்டது. பண்பாடுகளை காக்க வேண்டியதன் அவசியத்தை கூர்மையாக முன் வைப்பவர். திராவிட கருத்தியலுடன் கூடிய புதிய ஆராய்ச்சி முறையை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

தமிழக பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் காலமானார்!

கலாச்சாரம் என்பது மறுஉற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற மொழியை உடைத்தெறிந்து விட்டு எளிமையான மொழியில் வழிநின்று அரசியலை புரிய வைத்தவர். ஜல்லிக்கட்டு குறித்தும் பொங்கல் விழா குறித்தும் நிறைவான கருத்துக்களை மக்கள் முன் வைத்தவர். இதனை தொடர்ந்து தான் நடிகர் கமலஹாசன் தனது விருமாண்டி படத்தின் கதைக்காக இவரிடம் ஆலோசனை நடத்தி விட்டு அவரிடம் பெற்ற கருத்துக்களை படத்தில் வெளிப்படுத்தினார்.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட நடிகர் கமலஹாசன் எழுத்தாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய அழகர்கோவில் புத்தகம் குறித்து விரிவாக பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பரமசிவன் அளித்த பேட்டியையும் ஒளிபரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.