மெடிக்கலில் பாரசிட்டமால் மாத்திரை!- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மெடிக்கலில் பாரசிட்டமால் மாத்திரை!- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் பாரசிட்டமால் மாத்திரை வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மெடிக்கலில் பாரசிட்டமால் மாத்திரை!- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனையை தவிர்க்க, உடல் வெப்ப நிலையை குறைத்துக்காட்ட பாரசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது. இதைடுத்து, பல மெடிக்கல் கடைகளில் பாரசிட்டமால் மாத்திரைகள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசு இது தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

மெடிக்கலில் பாரசிட்டமால் மாத்திரை!- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில், சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் மெடிக்கல் கடைகளில் பாரசிட்டமால் மாத்திரை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், பாரசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் மக்கள் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.