Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் டெங்கு பாதிப்பை மட்டுமல்ல சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் பப்பாளி இலை ஜூஸ்!

டெங்கு பாதிப்பை மட்டுமல்ல சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் பப்பாளி இலை ஜூஸ்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய போது நிலவேம்பு குடிநீர், கொய்யா, பப்பாளி இலை ஜூஸ் பயன்படுத்தினால் நல்லது என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இன்று உலகம் முழுக்க டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க பப்பாளி இலை ஜூஸ் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

பப்பாளி இலை ஜூசுக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் திறன் மட்டும்தான் உள்ளதா என்றால் இல்லை. இன்னும் அதிக மருத்துவ குணங்கள் பப்பாளி இலைக்கு உள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது…

பப்பாளி இலை ஜூஸ் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகவும், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பப்பாளி இலையில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. அதில் உள்ள நுண் சத்துக்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நுண் சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹான்ஸ் திட்டுக்களைத் தூண்டுகிறது. இந்த லாங்கர்ஹான்ஸ் திட்டுக்களைப் பாதிக்கும் செல்களை கட்டுப்படுத்துகிறது.

செரிமானத்தை தூண்டுகிறது

வயிறு உப்பசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் பப்பாளி இலை ஜூஸை தொடர்ந்து அருந்திவந்தால் முன்னேற்றம் காணலாம். பப்பாளி இலையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தின் செயல்திறன் மேம்பட உதவுகிறது.

செல்களில் வீக்கத்தைத் தடுக்கிறது

உடலுக்குள் ஏற்படும் வீக்கம் மற்றும் வெளிப்புற வீக்கத்தைச் சரி செய்யும் பொருளாகப் பப்பாளி இலைச்சாறு உள்ளது. தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு தசை வலி, மூட்டு வலி பிரச்னைகள் மறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முடி வளர்ச்சி அதிகரிக்கிறது

பப்பாளி இலையை அரைத்து தலையில் தடவி வந்தால் முடி வளர்ச்சி மேம்படும். உடலில் உள்ள அதிகப்படியான ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது. பப்பாளி இலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் இதை சமாளித்து முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. பப்பாளி இலை மிகச்சிறந்த பூஞ்சை கொல்லியாக உள்ளது. பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சையை இது அழிக்கிறது.

சரும பராமரிப்பு

பப்பாளி இலையை அரைத்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் மிருதுவாகும். பப்பாளி இலையில் உள்ள பாப்பின் என்ற நுண் ஊட்டச்சத்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தைப் பொலிவு பெறச் செய்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ : அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில்...

நாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடனான சந்திப்பின்போது, அவர் பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாக பேசவில்லை என்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி...

உத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.. கியாஸ் சிலிண்டரை சுமந்தபடி பேசிய காங்கிரஸ் தலைவர்

உத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், ஹரிஷ் ராவத் சிலிண்டரை சுமந்தப்படி பேசியது தற்போது வைரலாகி...
TopTamilNews