பாபநாசம், சேர்வலாறு அணைகள் நாளை திறப்பு; 10 நாட்களுக்கு திறக்க முதல்வர் உத்தரவு

 

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நாளை திறப்பு; 10 நாட்களுக்கு திறக்க முதல்வர் உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து சற்று அதிகரித்த நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதே போல காவிரி டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நாளை திறப்பு; 10 நாட்களுக்கு திறக்க முதல்வர் உத்தரவு

இதுமட்டுமில்லாமல் பவானிசாகர் அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் உத்தரவிட்டதன் படி, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி நாளை முதல் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், ஆகஸ்ட் 14 வரை திறக்கப்படும் நீரால் நெல்லை மாவட்டத்தில் பாசன தேவையுடன் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.