உடலுக்கு அப்பளம் வைக்கும் “ஆப்பு”?

 

உடலுக்கு அப்பளம் வைக்கும் “ஆப்பு”?

தமிழர்களின் மதியச் சாப்பாட்டில் இடம் பெறும் ருசியான ஒரு அயிட்டம். அப்பளம். சாம்பார், ரசம், வத்தக் குழம்பு எனப் பல இருந்தாலும் அப்பளம் அடிசனலாக இருந்தால் அதன் சுவையே தனி. திருமண விருந்தில் சிலர் பாயாசத்துடன் அப்பளத்தை நொறுக்கிப்போட்டு சாப்பிடுவார்கள். சின்னக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவது அப்பளம்.

உடலுக்கு அப்பளம் வைக்கும் “ஆப்பு”?


ஆனால் அப்பளம் உடலலுக்கு ‘ஆப்பு’ வைக்கும் என்கிறார்கள்.அப்பளத்தில் அதிகம் சேர்க்கப்படுவது ஆப்ப சோடாவும்,உப்பும்..இவை இரண்டுமே உடலில் அதிகம் சேர்வது நல்லதல்ல. முக்கியமாக அசிடிட்டி மற்றும் செரிமான

உடலுக்கு அப்பளம் வைக்கும் “ஆப்பு”?

கோளாறுகள் உண்டாகும்.ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, ரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.
அப்பளத்தை எப்பொழுதாவது சாப்பிடலாம் அடிக்கடி சாப்பிடக்கூடாது.அளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை

உடலுக்கு அப்பளம் வைக்கும் “ஆப்பு”?

மலச்சிக்கல். அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. – இர.போஸ்